×

சிஐடியு வாகன நிறுத்த போராட்டம்

கம்பம்/தேனி: தனியார் மோட்டார் வாகன தொழிலை நசுக்கும் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ஆன்லைன் அபராதம் என்கிற பெயரில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்குவதை கண்டித்தும் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் கம்பம் வஉசி திடல் பகுதியில் 15 நிமிட வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்டோ சங்க ஏரியா செயலாளர் பால குருநாதன் தலைமை தாங்கினார். சிஐடியு ஏரியா செயலாளர் மோகன் துவக்க உரையாற்றினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஏரியா தலைவர் நித்திய குமார் வாழ்த்துரை வழங்கினார். ஆட்டோ சங்க ஏரியா தலைவர் லெனின் நிறைவுரையாற்றினார். போராட்டத்திரல் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் ஆட்டோ சங்க பொருளார் அப்பாஸ், துனைசெயலாளர் விஜயகுமார் உட்பட இப்பகுதியைச்சேர்ந்த ஏராளமான ஆட்டோ உரிமையாளர்கள் தங்கள் ஆட்டோக்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். * தேனி மாவட்ட ஆட்டோ தொழிலளர் சங்கத்தின் சார்பில் தேனி நகர் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் உரிமைக்குரல் தொழிற்சங்கத்தினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : CITU ,parking ,
× RELATED சீராக வழங்க கோரிக்கை பொன்னமராவதியில் மே தின விழா கொண்டாட்டம்